இன்ஜி. , கல்லுாரி ஆசிரியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

0
11

பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், குமரகுரு, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

பெரியநாயக்கன்பாளையத்தில் யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், 10ம் ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான யுனைடெட் டிராபி கிரிக்கெட் போட்டி, ஞாயிறுதோறும் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணிகள் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன. வரும் ஞாயிற்றுக்கிழமையும் போட்டிகள் நடக்கின்றன