தேசிய சைக்கிள் போலோ; கேரளா, சத்தீஸ்கர் வெற்றி

0
12

கோவை; கோவைப்புதுாரில் நடந்த தேசிய சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் சத்தீஸ்கர், கேரளா அணிகள் அதிக வெற்றிகளை குவித்தன.

தமிழ்நாடு சைக்கிள் போலோ சங்கம் மற்றும் கோவை மாவட்ட சைக்கிள் போலோ சங்கம் சார்பில், 21வது சப் ஜூனியர் மாணவியர், 27வது ஜூனியர் மாணவியர், 25வது சீனியர் பெண்களுக்கான, தேசிய சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவைப்புதுாரில் உள்ள ‘ஏ’ மைதானத்தில் ஐந்து நாட்கள் நடந்தது.

இதில், டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 280 வீராங்கனைகள் பங்கேற்றனர். 21வது சப் ஜூனியர் மாணவியர் பிரிவில் உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகியன முதல் மூன்று இடங்களை வென்றன.

தொடர்ந்து, 27வது ஜூனியர் மாணவியர் பிரிவில் சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கேரளா கிரீன் ஆகியன முதல் மூன்று இடங்களையும், 25வது சீனியர் பெண்கள் பிரிவில் கேரளா கிரீன், கேரளா ரெட், சத்தீஸ்கர் ஆகியன முதல் மூன்று இடங்களையும் பிடித்தன.சைக்கிள் போலோ இந்திய கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் சத்தீஸ்கர் அணி முதலிடத்தையும், கேரளா கிரீன் அணி இரண்டாம் இடத்தையும், உத்தரபிரதேசம் அணி மூன்றாம் இடத்தையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன