பேரன்பு…

0
131

என்னைப் பிணைத்து வைக்க
பேரன்பின் பெருவாக்கியங்கள்
தேவையில்லை…
அன்பின் சிற்றெழுத்துக்களே
போதுமானது எனத் தெரிந்தும்
நீயெனை நோக்கி
அலட்சியமாய் வீசும்
சிவப்பின் சொற்களையும்
சிதறாமல்
சேகரம் செய்கிறேன்
எனக்கான சிற்றெழுத்துக்களை
அவற்றுள் தேடிக்கொள்ள….

– அருணா சுப்ரமணியன்