கோவை அரசு மருத்துவமனை ஓராண்டில் 15 லட்சம் பேர் புற நோயாளிகளாக சிகிச்சை சாதித்துக் காட்டுகிறது

0
12

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கடந்த, 2024ம் ஆண்டு ஜன., 1 முதல் நவ., 30ம் தேதி வரை, 15 லட்சத்து 13 ஆயிரத்து 925 பேர் புறநோயாளிகளாகவும், ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 27 பேர் உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 7,000 முதல் 8,000 பேர் புற நோயாளிகளாகவும், 2,500 பேர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். கேரளா போன்ற பிற மாநில மக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.

2024ம் ஆண்டு மட்டும் 15 லட்சத்து 13 ஆயிரத்து 925 பேர் புறநோயாளிகளாகவும், ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 27 பேர் உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தவிர, 16,971 மேஜர் அறுவைசிகிச்சை நடைபெற்றுள்ளது. 7,520 பேருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன், 60,547 பேருக்கு சி.டி., ஸ்கேன், 1,89, 884 பேருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே,91,548 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் எடுக்கப்பட்டுள்ளது. 3,219 பேருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகப்பேறு பிரிவில் வழங்கப்படுகிறது’

மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”இம்மருத்துவமனையில், 2024ல் 6,181 பிரசவங்கள் நடைபெற்றன. இதில், 3,164 ஆண் குழந்தைகள், 3000 பெண் குழந்தைகள். 17 குழந்தைகள் இறந்தனர். மகப்பேறு பிரிவில் அனைத்து வசதிகளும், தொடர் கண்காணிப்பும் எப்போதும் வழங்கப்படுகிறது,” என்றார்.