மாநில கூடைப்பந்து போட்டி அன்னுார் அணி முதலிடம்

0
13

அன்னூர்: பொள்ளாச்சி, ஸ்ரீநிதி பப்ளிக் பள்ளியில், ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் 30 வயதுக்கு உட்பட்டோர், 30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இரு பிரிவுக்கும் பொதுவானோர் ஆகியோருக்கு ஆண்கள், பெண்கள் என ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

இதில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் கோவை பாரத் ஸ்போர்ட்ஸ் அணியும், அன்னுார் கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில் அன்னுார் அணி முதல் இடம் பெற்று கோப்பையை வென்றது.

ஓபன் மீட் பிரிவில் இறுதிச்சுற்றில் கோவை ரத்தினம் கல்லுாரி அணியும், அன்னூர் கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில் ரத்தினம் கல்லூரி அணி முதலிடமும், அன்னுார் கூடைப்பந்து கழக அணி இரண்டாம் இடமும் பெற்றது.

பள்ளி தாளாளர், அன்னுார் கூடைப்பந்து கழக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வீரர்களிடம் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.