வெண்டைக்காயில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துங்க

0
14

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில், வெண்டைக்காய் சாகுபடியில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டுதோறும், 40 ஹெக்டேர் அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்டைக்காயில், காய்த்துளைப்பான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு, 12 இன கவர்ச்சிப் பொறிகள் வைக்க வேண்டும்

மேலும், சேதமடைந்த காய்களை சேகரித்து அளிக்க வேண்டும். ட்ரைக்கோக்கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் எண்ணிக்கையில் விட வேண்டும்.

குவினால்பாஸ் 8 மில்லியை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும் அல்லது, இமாமெக்டின் பென்சோயோட் 2 கிராமை, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.