அகில பாரத நுகர்வோர் இயக்கத்தின் கூட்டம்

0
15

பொள்ளாச்சி : அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து, அகில பாரத நுகர்வோர் இயக்கத்தின் தென் மாவட்டம் சார்பில், 2025ம் ஆண்டுக்கான திட்டமிடல் கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.

தென் பாரத அமைப்பு செயலாளர் சுந்தர், அகில பாரத இணை செயலாளர் விவேகானந்தன், மாநில தலைவர் நடராஜன், மாநில செயலாளர் மணியன், மாநில இணை செயலாளர் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், மாநில, மாவட்ட, தாலுகா, கிளை நிர்வாகிகளின் பொறுப்பு மற்றும் பணி, இயக்கத்தின் ஐந்து பிரிவுகளின் பணிகள், மாவட்ட, தாலுகா நிர்வாகிகள் பொறுப்பு அறிவித்தல், 2025ம் ஆண்டு இயக்கத்தின் விரிவாக்கம், பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீஸ்வரன் செய்திருந்தார்.