கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது

0
13

கோவை, ஜன.1: ஆங்கில புத்தாண்டை (2025) வரவேற்கும் விதமாக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், பூங்காக்கள், கடற்கரை, சுற்றுலா தளங்களில், ரேஸ் கோர்ஸ் டவர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இரவு 10 மணி முதல் திரண்டனர். ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. அப்போது, பொதுமக்கள் கேக் வெட்டி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினர்.

கோவை பல தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு டிஜே இசை நிகழ்ச்சி நடந்தது. பெரிய கடைவீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை மிக்க புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், புளியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், 4ம் நம்பர் புனித பாத்திமா அன்னை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். புத்தாண்டு கொண்டாங்களின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 1600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்களில் மப்டி மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.