ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ராமர் கோவிலில் ஸ்ரீநிவாச கல்யாணம்

0
17

கோவை; ராம்நகர் ராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பெருமாளின் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.

ராமர் கோவிலில் (கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானம்) ஸ்ரீ ஹனுமத் ஜெயந்திஉற்சவத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை பிரார்த்தனை, புண்யாகவாசனம், சங்கல்பம், கலசஸ்தாபனம், ஜபம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு அஷ்டோத்ர சத மஹா மன்யு ஸீக்த ஹோமம் நடந்தது.

பகல் 1:00 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருப்பதி வெங்கடேசபெருமாளின் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடந்தது.

ராமர் கோவில் அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில், திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளுவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்சவர் மலையப்பசுவாமியும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். வேதவிற்பன்னர்கள் வேதங்களை முழங்க பாரம்பரிய ஹிந்து தர்ம சாஸ்திரப்படி, திருப்பதி வெங்கடேச பெருமாளின் ஸ்ரீநிவாச கல்யாண உற்சவம் பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.

மணமகள், மணமகன் சொந்தபந்தங்கள், சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் சூழ திருமாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், தேங்காய்உருட்டுதல், மொய்ப்பணம் சமர்ப்பித்தல், விருந்து

ஆகியவை வைபவங்கள் பக்தர்கள் சூழ, விமரிசையாக நடந்தது. திரளானோர் தரிசனம் செய்தனர்.

இன்று காலை 5:00 மணிக்கு பவமான ஸீக்த ஹோமம், 8:30 மணிக்கு மஹாதீபாராதனை, மாலை 6:30 மணிக்கு வேதபாராயணத்துடன் திருவீதி உலா நடக்கிறது.