கோவை; கோவை மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டடம் உட்பட ரூ.30.93 கோடி மதிப்பீட்டில், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று துவக்கிவைத்தார்.
ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில், 860 கி.மீ., நீளத்துக்கு ரூ.415 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக தார் சாலையாக அமைக்க ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.100 கோடிக்கு ‘டெண்டர்’ பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள ரூ.100 கோடிக்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், விடுபட்ட இடங்களில், புதிய தார் சாலை பணிகளும் துவங்கவுள்ளன.

கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு, இன்னும் தேவையான நிதி வழங்க அரசு தயாராக உள்ளது. அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீட்டிக்க, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளன. மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மேம்பாலத்தை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் குறித்த நிருபர்கள் கேள்விக்கு, ‘உங்களுக்கு இன்று சண்டே வேலை இருக்கா, இல்லையா?’ என்று கேட்டபடி அங்கிருந்து நகன்றார்.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.பி.,கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.