தெப்பக்காடு முகாமிற்கு செல்கிறது குட்டி யானை

0
11

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், துடியலுார் அருகே வரப்பாளையம் செல்லும் வழியில், சில நாட்களுக்கு முன், 30 வயதான பெண் யானை இறந்து கிடந்தது. உடல் கூறாய்வு பரிசோதனையில் யானை மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது.

அதே பகுதியில், கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று சுற்றி திரிந்தது. இறந்த தாய் யானையின் குட்டி என கருதப்பட்ட அந்த குட்டியை, அதன் உறவுகள் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று வரை குட்டியை யானை கூட்டம் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.