தக்காளி பல்ப் தயாரிப்பு வாகனம் மாற்று பயன்பாட்டுக்கு சமர்ப்பிப்பு

0
15

கோவை : கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தக்காளி பல்ப் பிராசசிங் நடமாடும் வாகனம், தற்போது மாற்று பயன்பாட்டுக்காக சீரமைக்கப்படவுள்ளது.

தேசிய வேளாண் விரிவாக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், தக்காளி பல்ப் தயாரிப்பு நடமாடும் வாகனம், 2022ல் கோவைக்கு வழங்கப்பட்டது.

40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இந்த வாகனத்தில் அதிகபட்சம் நாளொன்றுக்கு, 250 கிலோ பிராசஸ் செய்ய முடியும்.

ஜாம் மற்றும் சாஸ் தயாரிக்க, கிலோவுக்கு 150 ரூபாய் செலவாகிறது. சந்தை போட்டிகளை சமாளிக்க முடியாமல், விவசாயிகள் இவ்வாகனத்தை பயன்படுத்த முன்வரவில்லை.

இந்த வாகனத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியாத நிலையிலும், வாகன வாடகை, பராமரிப்பு செலவு காரணமாக, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், பயன்பாடு முற்றிலும் முடங்கியது.

விவசாய வணிக துணை இயக்குனர் மீனாம்பிகை கூறுகையில், ”தக்காளி பல்ப் தயாரிக்கும் மொபைல் வாகனம் உற்பத்தி செலவினம் அதிகமானது. தற்போது வாகனம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாற்று பயன்பாட்டுக்கு சீரமைக்கஎடுத்துள்ளனர்,” என்றார்.