போதை தடுப்பு கருத்தரங்கம்

0
13

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் போதை தடுப்பு விழிப்புணர்வு மன்றம் சார்பில், ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது.

இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் சக்திஸ்ரீ தலைமை வகித்தார். டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிபேராசிரியர் செங்கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.