கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையத்தில், கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசுகையில், ”நவீன காலத்தில் சிலர் பெற்றோர்கள் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இந்த குழந்தைகள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. நான்கு குழந்தைகளை வளர்ப்பதை விட, ஒற்றைக் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமானது,” என்றார்.
விழாவில், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் அறங்காவலர்கள் மோகன்லால், தணிகைவேல், ஜித்தேஷ், கிஷோர், முதல்வர் நிர்மலா, துணை முதல்வர் மாதவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.