நுால் இழையில் உருவான ரத்தன் டாடாவின் ஓவியம்

0
13

கோவையில் பெண்மணி ஒருவர், பிரபல தொழிலதிபரான மறைந்த ரத்தன் டாடாவின், 87வது பிறந்தநாளையொட்டி, அவரின் உருவப்படத்தை, நூல் இழையால் உருவாக்கியுள்ளார்.

நல்லூர் வயலில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிட பள்ளியில், விடுதி காப்பாளராக பணிபுரிந்து வருபவர் ரேவதி, 39. இவர், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

நாட்டின் சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில், தேசத் தலைவர்களின் படங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களை வரைவதை, வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரபல தொழிலதிபரும், டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த ரத்தன் டாடாவின், 87வது பிறந்தநாளான நேற்று, அவரை கவுரவிக்கும் வகையில், நூலிழையில், அவரின் புகைப்படத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இவர், சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, குகேஷின் உருவ படத்தை ஓவியமாக வரைந்து, வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.