பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்துக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்புகளில் இருந்து தினசரி காலை, மாலை கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால் தற்போது இயக்கப்படும் பஸ்களில் அதிக அளவு பயணிகள் நெருக்கடியான சூழலில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, காலை நேரத்தில் தடாகத்தில் பன்னிமடை வழிதடத்தில் கோவைக்கு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதே போல, மாலை, 5:00 மணிக்கு துடியலூரில் இருந்து பன்னிமடைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது