பென்ஷன் அதாலத்; வரும் 31ல் குறைகள் இருந்தா சொல்லுங்க!

0
14

கோவை; கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை கோட்ட அளவிலான ஓய்வு பெற்ற தபால் ஊழியர்களுக்கான பென்ஷன் அதாலத், வரும் 31ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதுநிலை கோட்ட தபால் அதிகாரி அலுவலகத்தில் நடக்கிறது.

தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை, கோட்ட அளவிலான லோக் அதாலத்தில் தெரிவித்து தீர்வு காணும் வகையில், docoimbatore.tn@indiapost.gov.in அல்லது தலைமை தபால் கண்காணிப்பாளர் கோவை கோட்டம், கோவை 641001 என்ற முகவரிக்கு, வரும் 30ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறியுள்ளார்.