போத்தனுார்; போத்தனுார் அடுத்த வெள்ளலுார், கஞ்சிக்கோனாம்பாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தார் சரவணன்,41. இவருக்கு தூத்துக்குடியை சேர்ந்த தற்போது போத்தனுார், ஸ்ரீராம் நகரில் வசிக்கும் சக்திவேல், 43 பழக்கமானார். இவர், தான் பொதுப்பணித்துறையில் டிரைவராக வேலை பார்ப்பதாகவும், அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து, 13 லட்சம் ரூபாய் கொடுத்தனர். கடந்த 10ம் தேதி இவர், ‘சீல்’ வைக்கப்பட்ட நான்கு கவர்களை கொடுத்து, பணிக்கான ஆணை என கூறியுள்ளார்.
சரவணன் அதனை எடுத்துக்கொண்டு, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணி ஆணை போலியானது என தெரிந்தது. அதன் பின், சக்திவேலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.