நெல் மற்றும் நிலக்கடலை விதை பண்ணைகளில் ஆய்வு

0
16

தொண்டாமுத்தூர்; இக்கரை போளுவாம்பட்டியில், வேளாண்மை துறை மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் நிலக்கடலை விதை பண்ணைகளை, வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேளாண்மை துறை சார்பில், மானியத்தில், விவசாயிகளுக்கு, நெல் மற்றும் நிலக்கடலை விதைகள் வழங்கப்படுகின்றன. இதில், இக்கரை போளுவாம்பட்டி வருவாய் கிராமத்தில், கோ 55 ரக நெல் ஆதார நிலை 2 விதைப்பண்ணையும், கதிரி லேபாக்சி 1812 நிலக்கடலை ரகம் ஆதார நிலை 1 விதைப்பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதைப் பண்ணைகளை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) விஜய கல்பனா, தொண்டாமுத்தூர் வேளாண்மை அலுவலர் முகமது தாரிக், தொண்டாமுத்தூர் விதை சான்று அலுவலர் செல்லம்மாள் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வில், கோ 55 ரக நெல் ஆதார நிலை 2 விதைப்பண்ணையில், 85 நாட்களாகியுள்ளதும், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய தயாராக உள்ளதும் தெரியவந்தது.

இந்த ரக நெல், ஒரு ஏக்கருக்கு, 2.5 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை வழங்க வேண்டும் என, விதை பண்ணை விவசாயிகளிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.