ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைப்பு

0
16

உடுமலை : உடுமலை நகராட்சியில், மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நிலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிக்கை: உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குஉத்தரவுகளின் அடிப்படையில், மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில், யாரும் கண்டறியப்படவில்லை.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம்-2013, பிரிவு எண் 11ன் படி, பொதுமக்கள் தங்களை ஆட்சேபனைகளை, 15 நாட்களுக்குள் நகராட்சி கமிஷனருக்கு எழுத்து பூர்வமாக வழங்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.