நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2.5 கோடி நகை மோசடி

0
16

கோவை : கோவை, பெரிய கடை வீதியில் உள்ள பவளம் தெருவில், அடுக்குமாடி வளாகம் உள்ளது. இங்கு மூன்றாவது தளத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் தனபால், 49. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரன் பழக்கமானார்.

ராஜகுமாரன், தனபாலிடம் தனக்கு நகை தரும்படியும் அதற்குரிய பணத்தை, இரு தினங்களில் திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய தனபால், அவரிடம் ரூ.2.5 கோடி மதிப்பிலான, 3.570 கிலோ தங்க நகைகளை கொடுத்தார். ஒரு மாதம் ஆகியும் ராஜகுமாரன் பணத்தை திருப்பித்தரவில்லை.

இதுகுறித்து ராஜகுமாரனிடம் கேட்ட போது, ராஜகுமாரன், அவர் மனைவி மகேஸ்வரி, மகேஸ்வரியின் சகோதரர் ராமதாஸ் ஆகியோர், தனபாலை மிரட்டினர்.

தனபால், பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் ராஜகுமாரன், அவர் மனைவி, மகேஸ்வரி, ராமதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.