பேராசிரியரிடம் ரூ.21 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

0
14

கோவை ; கோவை, சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 36; பேராசிரியர். இவருக்கு, இணையதளம் வாயிலாக ஒருவர் பழக்கமானார். அருண்குமாரிடம் அந்நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.

இதை நம்பி அருண்குமார், அவர் கூறிய கணக்கிற்கு கடந்த ஆக., முதல், அக்., வரையிலான காலத்தில், ரூ.21 லட்சம் அனுப்பினார். ஆனால், அந்நபர் அவர் கூறியபடி லாபத்தொகை மற்றும், முதலீட்டையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்குமார், கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.