கோவில்பாளையம்: நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில், விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், செல்வராஜ், கந்தசாமி, ஜெயராம், தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் நாராயண சாமி நாயுடு சிலைக்கு மாலைஅணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர்கள் ரவி தலைமையில் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்தினர். நாராயணசாமி நாயுடுவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
பா.ஜ., சார்பில், விவசாய பிரிவு மாநிலத் தலைவர் நாகராஜ் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் செந்தூர் முருகேஷ் உள்ளிட்டோர், மாலை அணிவித்து நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினர். உழவர் உழைப்பாளர் கட்சியினர், செல்லமுத்து தலைமையிலும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் சண்முகம் தலைமையிலும், அஞ்சலிசெலுத்தினர்