கே.பி. ஆர்., கல்லுாரி சார்பில் இன்று மினி மராத்தான்

0
16

கோவை: கோவை கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி போதைப் பொருள் இல்லா எதிர்காலத்தை மையமாக கொண்டு, இன்று கே.பி.ஆர்., மினி மராத்தான் போட்டி நடத்தவுள்ளது.

மராத்தான் போட்டியில், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோர் அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் படி, 2 கி.மீ., 5 கி.மீ., 8 கி.மீ., என மூன்று பிரிவுகளில் நடக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வரும்,100 பேருக்கு சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்படுவதுடன்; வெற்றி பெறுபவர்களுக்கு 3.3 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யும் அனைவருக்கும் டி–ஷர்ட், பதக்கம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு பதிவுக்கட்டணம் 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, அனுமதி இலவசம். மராத்தானில் கலந்து கொள்ள, 80985 06056 என்ற எண்ணிலும், https://www.theticket9.com/event/kpr-mini-marathon என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம்.