கோவை: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், சர்வதேச புடவை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறந்த முறையில் சேலை கட்டும் போட்டி, இந்திய மாநிலங்களின் பாரம்பரியத்தைக் தெரிவிக்கும் உடை அணிவகுப்பு மற்றும் இந்திய பாரம்பரியங்களின் செழுமையான பன்முகத்தன்மையை வெளிக்காட்டும், கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாணவிகளின் புதுமையான ஆடை அலங்காரத் திறனை, வெளிக்காட்டும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலாசாரத்தை அறியும் வகையில் அமைந்தது. நிகழ்வில் கல்லூரியின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவியர், 100க்கும் மேற்பட்ட பேராசிரியைகள் பங்கேற்றனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் கவிதா, செயலர் ரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.