மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

0
13

தொண்டாமுத்தூர்: மடக்காடு மலை கிராமம், சம்மந்தர் வீதியை சேர்ந்தவர் ராம்குமார்,36. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ராம்குமார் கடந்த மூன்று மாதங்களாக, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை, வீட்டின் உள்ளே சென்று தூங்குமாறு, மனைவி கவிதாமணி தெரிவித்துள்ளார். அதன்பின், கவிதாமணி அருகிலுள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, ராம்குமார் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.