கோவை: கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின், புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜன., 5ம் தேதி நடக்கிறது.
கோவை மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், ஆலோசனை நடத்தினர்.
இதில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராஜ், தேர்தல் அதிகாரியாக நிமிக்கப்பட்டார்.
வரும் ஜன.,5ம் தேதி,கோவை மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மூடி முத்திரையிடப்பட்ட உறையில், போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. இன்று காலை, 10:30 மணி முதல் வேட்பு மனுக்குள் தேர்தல் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, மதியம், 12:30 மணிக்கு, வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளது.
வரும் ஜன.,5ம் தேதி, வ.உ.சி., பூங்கா ஆபீசர்ஸ் கிளப்பில் காலை, 10:30 மணிக்கு தேர்தல் நடக்கிறது.
வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய 35 உறுப்பினர்களும் வாக்களிக்கலாம்.
வாக்குகள் எண்ணப்பட்டு, மதியம், 1:30 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என, தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராஜ் தெரிவித்துள்ளார்.