வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை திருட்டு

0
16

வடவள்ளி:கோவை, வடவள்ளி பெரியார் நகர், ஐந்தா-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 53. இவரது மனைவி கலைவாணி, 50; மாநகராட்சி பள்ளி ஆசிரியை.

கலைவாணி நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பின்னர், மதியம் தன் கணவருக்கு போன் செய்து, சார்ஜரை எடுத்து வரும்படி கூறினார். ரமேஷ் குமார், 1:45 மணியளவில் சார்ஜரை, கலைவாணியிடம் கொடுக்க வீட்டை பூட்டி சென்றார்.

சார்ஜரை கொடுத்து விட்டு, 2:05 மணிக்கு திரும்பினார். அப்போது, முகமூடி அணிந்தபடி இருவர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். ரமேஷ் குமாரை பார்த்தவுடன், பைக்கில் தப்பினர்.

பீரோவில் வைத்திருந்த, 58 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் பணம் திருட்டு போயிருந்தன. ரமேஷ் குமார் போலீசில் புகார் அளித்தார்.

வடவள்ளி போலீசார், குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்துள்ளனர்.