சூலுார்; கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் நீலம்பூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, ‘சிங்கப்பெண்ணே’ எனும் கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்க்கான இலவச தடுப்பூசி திட்ட துவக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
சுழற்சங்க மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு, தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா, ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குறைப்பதில், தடுப்பூசியின் பங்கு குறித்து விளக்கினர். ரோட்டரி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மோகன்சந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
‘கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்தும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், எச்.பி.வி. தடுப்பூசியை ஊக்குவிப்பதும் திட்டத்தின் நோக்கமாகும். 44 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி, பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, இலவச தடுப்பூசி திட்டத்தை சுழற்சங்க ஆளுநர் சுந்தரவடிவேலு துவக்கி வைத்தார். விழாவில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா, நீலம்பூர் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.