வண்ண நுாலிழைகளால் குகேஷூக்கு வாழ்த்து

0
14

தொண்டாமுத்தூர்; உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் உருவ படத்தை, நூல் இழையை வைத்து ஓவியமாக வரைந்து, நல்லுார் வயலை சேர்ந்த ஒரு பெண்மணி அசத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், நல்லூர் வயலில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிட பள்ளியில், விடுதி காப்பாளராக பணிபுரிந்து வருபவர் ரேவதி, 39. ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், சுதந்திர தினம், குடியரசு தினம், சுற்றுச்சூழல் தினம் போன்ற தினங்களில், ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்ற, தமிழகத்தை சேர்ந்த, குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நூல் இழையில், அவரது உருவத்தை 3¼ அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்ட காடா துணியில், வரைந்து அசத்தியுள்ளார் ரேவதி.