கோவை; கோவை, சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நேற்று மாலை துவங்கியது.
கோவை மாநகராட்சி, 60வது வார்டு கவுன்சிலர் சிவா, சர்க்கஸ் முதல் காட்சியை துவக்கி வைத்தார். ஜெமினி சர்க்கஸ் மேலாளர் சேதுமாதவன் கூறியதாவது:
கோவையில் ஜெமினி சர்க்கஸ் பார்ப்பதற்கு, நிறைய ரசிகர்கள் உள்ளனர். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து பார்ப்பவர்கள் அதிகம். இந்த முறை நிறைய சாகசக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 100க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளையும், சர்க்கஸ் ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.