மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

0
31

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. அதில், வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

இதில், இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் ‘யுனைடெட் பேஸ்கட்பால் கிளப்’ கோவை அணி கோப்பையை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோவை மாவட்ட கூடை பந்தாட்ட கழகத்தின் தலைவர் செல்வராஜ், பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கினார்.

நேஷனல் கூடை பந்தாட்ட கழகத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெப்ரோசர், சக்தி, முகமது இஸ்மாயில் பங்கேற்றனர்.