கோவை; அமித்ஷாவுக்கு எதிராக,கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமிஷா, அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா பதவி விலகவும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.