தர்ம சாஸ்தா கோவிலில் நாளை 18ம் படி திறப்பு

0
129

அன்னுார்; புளியம்பட்டி, தர்மசாஸ்தா கோவிலில், பதினெட்டாம் படி திறப்பு விழா நடக்கிறது.

புளியம்பட்டி, சத்தி ரோட்டில், நேரு நகரில், பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 18ம் படி திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ‘இந்த ஆண்டு வரும் 21ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவிலில் பதினெட்டாம் படி திறக்கப்படுகிறது.

சபரிமலையில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்ட பதினெட்டாம் படியில், ஆண் பெண் இருபாலரும் ஏறி, தர்ம சாஸ்தா சுவாமியை தரிசிக்கலாம். இறையருள் பெறலாம்,’ என திருக்கோவில் நிர்வாக குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.