குண்டு எறிதல், லக்கி கார்னர், செஸ் போட்டியில் பேராசிரியர்கள் அசத்தல்

0
64

கோவை : இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த லக்கி கார்னர், செஸ் உள்ளிட்ட போட்டிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அசத்தினர்.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கேரம், செஸ், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள், பணிச்சுமைக்கு மத்தியில் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் வகையில் நடத்தப்பட்டன.

பெண்களுக்கான ‘லக்கி கார்னர்’ போட்டியில் வெண்ணிலா, ஜனரஞ்சனி, செல்வபிரியா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான போட்டியில் அஜித்குமார், தங்கமணி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

குண்டு எறிதல் பெண்கள் பிரிவில் சுஷ்மி, மோகனப்பிரியா, யேகம்மை ஆகியோரும், ஆண்கள் பிரிவில் மோகன்பாபு, சரவணன், அகஸ்டின் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.