நிலம் விற்பதாக ரூ. 1.75 கோடி மோசடி பலரை ஏமாற்றிய ரயில்வே அதிகாரி கைது

0
86

கோவை:கோவை, கவுண்டம்பாளையம், கந்தகோனார் நகரை சேர்ந்தவர் ராஜன், 45, தொழிலதிபர். கடந்த, 2023 அக்., மாதம் கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த பிஜாய், 46, அவரது மனைவி ரெகனா, இவருக்கு அறிமுகமாகினர்.

அப்போது பிஜாய், இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக உள்ள தனக்கு சொந்தமாக பாலக்காடு அருகே அகழியில் இடம் இருக்கிறது; அதை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார். ராஜனை அகழிக்கு அழைத்துச்சென்று ஒரு இடத்தை காட்டினார்.

ராஜனுக்கு பிடித்திருந்ததால், வாங்க விருப்பம் தெரிவித்தார். பின், ராஜன், 2023 அக்., 13 முதல் 17 வரை, 15 தவணைகளில், 1.75 கோடி ரூபாயை பிஜாயின் மனைவியின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.

ராஜன், பிஜாயின் வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டார். ‘திருப்பி தர முடியாது; பணத்தை கேட்டு வந்தால் ஆள் வைத்து கொன்று விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, ராஜன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த 17ம் தேதி புகார் அளித்தார். போலீசார் பிஜாய், ரெகனா மீது வழக்கு பதிவு செய்து, சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்த பிஜாயை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ரெகனா குறித்து விசாரிக்கின்றனர். இந்த இருவரும் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது.