பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா

0
87

பெ.நா.பாளையம். டிச.20: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு வஞ்சிமா நகரில் மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவரது உருவ படத்திற்கு கூடலூர் நகராட்சி நகர செயலாளர் மற்றும் கூடலூர் நகர் மன்ற தலைவர் அறிவரசு தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், துரை செந்தில்குமார், மீனா கணேசன், பொன் மாடசாமி, பேங்க் முருகேசன், ரம்யா, சித்ரா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் குணசேகரன், முருகன், நிர்வாகிகள் வக்கீல் பிரபு, பால்சந்த், பழனிச்சாமி, இளைஞர் அணி உதயகுமார், தகவல் தொழிற் நுட்ப அணி முனுசாமி, உதயகுமார், நந்தகோபால், சித்தரைசாமி, ஸ்ரீனிவாசன், கிரேசி, புஷ்பாலதா, பேபி, சுப்பம்மாள், வார்டு செயலாளர்கள் விஷ்ணுபிரியா, ரமேஷ், மாரிமுத்து, நாகராஜ், தேவராஜ், சுரேஷ், கணேசன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.