புறக்காவல் நிலையம் இடித்து அகற்றம்

0
87

கோவை, டிச. 19: கோவை பீளமேடு மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே அம்மா உணவகத்தின் முன்பு சாலையோரம் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வந்தது.  இந்த புறக்காவல் நிலையம் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் பல்வேறு தரப்பினர் புகார் செய்தனர்.

இதையடுத்து அவர், மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புறக்காவல் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதையொட்டி, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.