பா.ஜ., ஒன்றிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி

0
12

அன்னுார்; அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்ப்பு கடந்த மாதம் வரை நடந்தது. இதையடுத்து முதல் கட்டமாக கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அன்னுார் தெற்கு ஒன்றியத்தில், 62 ஓட்டு சாவடிகள் உள்ளன. இங்கு இதுவரை 4010 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிளை நிர்வாகிகள் தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட 45 ஓட்டுச் சாவடி கிளைகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை 30 கிளைகளில் தேர்தல் முடிந்துள்ளது. தலைவர், செயலாளர், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர் உள்ளிட்ட 11 பேர் இதில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கணேசபுரத்தில் நடந்த தேர்தலில் கட்சி தேர்தல் அதிகாரி செந்தில், உதவி தேர்தல் அதிகாரி மாரிமுத்து, தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெற்கு ஒன்றியத்தில் தலா 50 உறுப்பினர்களை சேர்த்து 45 பேர் தீவிர உறுப்பினர் ஆகியுள்ளனர். ஒன்றிய தலைவர் பொறுப்புக்கு தேர்தல் நடத்த முதல் கட்டமாக தீவிர உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.

இதில் தெற்கு ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க பலரும் தீவிர உறுப்பினர்களிடம் ஆர்வமாக ஆதரவு திரட்டினர். ‘விரைவில் ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெறும்,’ என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.