கருமத்தம் பட்டியில் ஐயப்ப சுவாமி ஊர்வலம்

0
17

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டியில் ஐயப்ப சுவாமி திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கருமத்தம்பட்டி ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், முதலாம் ஆண்டு ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. கருமத்தம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து திருவீதி உலா துவங்கியது.

சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் பவனி வந்த ஐயப்ப சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேள, தாளத்துடன் கருமத்தம்பட்டி புதூர், சோமனூர் ரோடு வழியாக சென்று, கருமத்தம்பட்டியில் நிறைவுற்ற திருவீதி உலாவில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சரண கோஷமிட்டு உடன் சென்றனர்.