ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான்

0
13

கோவை; புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு கோவை மாரத்தான் போட்டியில், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவையில், ‘வாக்கரூ’ சார்பில் நேற்று, கோவை மாரத்தான் போட்டி நடைபெற்றது. புற்று நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டவும், நடைபெற்ற இந்த போட்டியை, கலெக்டர் கிராந்தி குமார், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து, துவக்கி வைத்தனர். போட்டியில் பங்கேற்று ஓடினர்.

கோவை வ.உ.சி., மைதானம் அருகே துவங்கிய இந்த மாரத்தானில், 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டம் என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வாக்கரூ நிர்வாக இயக்குனர் நவுசத், டி.ஐ.ஜி., சரவண சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவு

21 கி.மீ., பிரிவில், தீபக் பாபு கும்பார் முதலிடம், பிரமோத் சிங் இரண்டாமிடம், வினோத்குமார் மூன்றாமிடம்; 10 கி.மீ., பிரிவில், வைபவ் பாட்டீல் முதலிடம், அன்மோல் சர்மா இரண்டாமிடம், ஜெரால்ட் சிசில் மூன்றாமிடம் பிடித்தனர்.

மூத்தோருக்கான 21 கி.மீ., பிரிவில், ஜான் கென்னடி முதலிடம், பிரபாகர் இரண்டாமிடம், வேலாயுதம் மூன்றாமிடம்; 10 கி.மீ., பிரிவில் கர்னல் ஹரிஷ் ராமச்சந்திரன் முதலிடம், ராஜ் இரண்டாமிடம், உதயகுமார் கருப்பையா மூன்றாமிடம் பிடித்தனர்.

பெண்கள் பிரிவு

21 கி.மீ., பிரிவில் திவ்ய பாரதி முதலிடம், பிரதீஸ்ஷா இரண்டாமிடம்; நிஷு பிரியா மூன்றாமிடம்; 10 கி.மீ., போட்டியில், சம்ய ஸ்ரீ முதலிடம், நந்தி சொரூட் இரண்டாமிடம், சங்கீதா ராணி மூன்றாமிடம் பிடித்தனர்.

மூத்தோர் 21 கி.மீ., பிரிவில், ரஞ்சினி குப்தா முதலிடம், பிந்து இரண்டாமிடம், கலைமணி மூன்றாமிடம்; 10 கி.மீ., பிரிவில் ஊர்மிளா சூரனா முதலிடம், அமுதநாயகி இரண்டாமிடம், சசிகலா மூன்றாமிடம் பிடித்தனர்.