கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கோவையில் இன்று துவக்கம்

0
13

கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம், இன்று துவங்கி, தொடர்ந்து, 21 நாட்கள் நடைபெறவுள்ளது.

கோமாரி நோய், கலப்பின மாடுகளையே அதிகம் தாக்கும். கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயால் இறப்பு குறைவாக இருந்தாலும், பால் உற்பத்தி குறையும்; எருதுகளின் வேலைத்திறன் குறையும்.

கறவை மாடுகளுக்கு சினை பிடித்தல் தாமதமாகும். இளங்கன்றுகள் இறப்பு போன்ற பாதிப்புகளால் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

குளிர் மற்றும் பனிக்காலத்தில், காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதித்த மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவும்.

அதனால், கோவை மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு, தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்; இம்முகாம், நாளை (இன்று) துவங்குகிறது என, கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.