பூங்காக்களில் போலீசார் கண்காணிப்பு

0
94

கோவை, டிச.16: கோவை மாநகரில் உக்கடம் வாலாங்குளம், பெரிய குளம், முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி குளம் போன்றவற்றில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கே தினமும் பல ஆயிரம் பேர் காலை மாலை நேரங்களில் குவிகிறார்கள். வாக்கிங் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்த பகுதியில் குற்ற நிகழ்வுகளை தடுக்க போலீசார்ரோந்து பணி நடத்தி கண்காணித்து வருகின்றனர். போலீசார் பூங்கா, கரையோர பகுதிகளில் ரோந்து சென்று குற்றவாளிகள் நடமாட்டம், சமூக விரோத செயல்கள் நடக்கிறதா? என கண்காணிக்கின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக கண்டறியப்படும் காட்சிகள் வைத்தும், சட்ட விரோத கும்பல் நடமாட்டம், கஞ்சா போதை பொருட்கள் விற்பனை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பூங்கா பகுதியில் சிலர் அத்துமீறி நடப்பதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு தொந்தரவு தரும் போதை நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் புகார் கூறியுள்ளனர். இதை தடுக்க மாலை, இரவு நேரங்களில் போலீசார் மப்டியில் கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர்.