ஒரே கல்லீரலை இருவருக்கு பொருத்தி கே .எம். சி.எச்., சாதனை

0
47

கோவை; கே.எம்.சி.எச்., மருத்துவர்கள், விபத்தில் மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் கல்லீரலை, இருவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்பட்ட கல்லீரலை இரு பிரிவுகளாகப் பிரித்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த, இரு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

அதில் ஒருவருக்கு, கல்லீரலுடன் சேர்த்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொருவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு மருத்துவ நிபுணர் குழுவினரும், ஒரே நேரத்தில் இந்த அறுவை சிகிச்சைகளை, வெற்றிகரமாக செய்து, நோயாளிகளை காப்பாற்றியுள்ளனர். மருத்துவ குழுவினரை, கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் வாழ்த்தினர்.