காந்திபுரத்தில் அன்னபூர்ணீஸ் புதிய கிளை திறப்பு விழா..

0
30

கோவை: பொங்கலுார்,ஸ்ரீ அன்னபூர்ணீஸ் ஸ்வீட்சின் கிளைகள், திருப்பூர், பல்லடம், உடுமலை, கோவையில் பீளமேடு, சரவணம்பட்டி, காந்திபுரம் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தற்போது, கோவை காந்திபுரம், சத்தி மெயின் ரோடு, கிராஸ்கட் ரோடு சிக்னல் அருகே, புதிய கிளையின் திறப்பு விழா நேற்று நடந்தது.நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பிரனேஷ், சுகன்யா மற்றும் பாலகிருஷ்ணன், சுகந்தி பங்கேற்றனர்.

உரிமையாளர்கள் கூறுகையில், ‘பொங்கலூர் ஸ்ரீ அன்னபூர்ணீ ஸ்வீட்சில், 200க்கும் மேற்பட்ட இனிப்புகள் மற்றும் கார வகைகள் உள்ளன. பாரம்பரிய இனிப்பு வகைகள் முதல் தற்போதைய புதிய இனிப்பு வகைகளும்உள்ளன. சாட் வகைகள், ஊறுகாய், தொக்கு மற்றும் பொடி வகைகளும் கிடைக்கும்’ என்றனர்.