இன்றும் நாளையும் சொத்து வரி முகாம்

0
53

கோவை; கோவை மாநகராட்சிக்கு வரியினங்கள் செலுத்த, இன்றும் (டிச., 14), நாளையும் (டிச., 15) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

காளப்பட்டி நேரு நகர் பஸ் ஸ்டாப் அருகில், ஒண்டிப்புதுார் நெசவாளர் காலனி, சரவணம்பட்டி ஜனதா நகர், குறிச்சி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 அசோசியேஷன் கட்டடம், சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில், இரு நாட்களும் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர். நகர் மாநகராட்சி சமுதாய கூடத்தில், இன்று மட்டும் முகாம் நடைபெறும். வெங்கிட்டாபுரம் ஆனந்தா ஹவுசிங் யூனிட் விநாயகர் கோவில் பகுதியில், நாளை (ஞாயிறு) மட்டும் முகாம் நடத்தப்படும்.

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை வரியினங்களை செலுத்தலாம் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.