ஊராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு

0
52

கோவில்பாளையம்; கிராம ஊராட்சிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில், தூய்மை பணியாளர்கள், மோட்டார் ஆபரேட்டர்கள், ஊராட்சி அலுவலக ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் ஒத்துழைப்பு தந்த ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.