கோவை; கோயம்புத்துார் திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் இணைந்து, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.
இந்த வரும், மார்கழி மாத உபன்யாச நிகழ்ச்சியை, பிரபல உபன்யாசகரும் ஹரிகதை வித்வானுமான கலைமாமணி கல்யாணபுரம் ஸ்ரீ உவே ஆராவமுதாச்சாரியார் நடத்துகிறார்.
நாளை மறுநாள் முதல் வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 6:30 முதல் 8:15 மணி வரை, ராமர் கோவில் பிரவசன மண்டபத்தில், சொற்பொழிவு நடக்கிறது. பக்தர்கள் அனைவரும், உபன்யாச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.