அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மன்னீஸ்வரர் கோவிலில், அர்த்தமண்டபம், மற்றும் அருந்தவ செல்வி அம்மன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டன. அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் மகா மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தீப கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.