பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ,தொடர்மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு;

0
53

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறையில், தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது பெய்து வரும் மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை பெய்தால் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

மலைப்பகுதியில் தொடர் மழையால் கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது.

* தற்போது பெய்து வரும் மழையால், மலைப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அர்த்தநாரிபாளையம் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளம் பாய்ந்து சென்றது.

வீதிகளில் வெள்ளம்

உடுமலை, காந்திசவுக், குமரன் வீதி, செல்லமுத்து வீதி, பாண்டியன் நகர், கவிமணி சந்து பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான ரோட்டில் மழை நீர் வடிய வசதியில்லாததால், ரோட்டில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியது. இதனால், பொதுமக்கள் வெளியில் வர முடியாமல், பாதித்தனர்

ஓடையில் வெள்ளப்பெருக்கு

திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்ததால், மத்தளப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைமட்ட பாலம் நீரில் மூழ்கியது; இந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மரம் விழுந்தது

உடுமலை- திருமூர்த்திமலை ரோட்டில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் பகுதியில், மழைக்கு தாங்காமல் ரோட்டோரத்திலுள்ள மரம் நேற்று முன்தினம் விழுந்தது. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர்படுத்தினர்.

வால்பாறை

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. அய்யர்பாடி எஸ்டேட்டில் தோட்ட அதிகாரியின் வீட்டின் மீது மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்ட கார் சேதமானது.

மழை அளவு

உடுமலை பகுதிகளில் அதிகபட்சமாக, நல்லாற்றில், 157 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.

உடுமலை – 63 மி.மீ.,, அமராவதி அணை – 110, – 90 திருமூர்த்தி அணை -138, திருமூர்த்தி ஆய்வு மாளிகை ,- 138, உப்பாறு அணை, 48, கொமரலிங்கம், 108, பெதப்பம்பட்டி, 46, வரதராஜபுரம், 62, பூலாங்கிணர், 59, நல்லாறு, 157 மி.மீ.,

வால்பாறை -57, சோலையாறு-26, பரம்பிக்குளம்-35, ஆழியாறு-85, மேல்நீராறு -79, கீழ்நிராறு-40, காடம்பாறை-74, மேல்ஆழியாறு -67, வேட்டைக்காரன் புதுார் -22, துணக்கடவு-46, மணக்கடவு -9, சர்க்கார்பதி-57, பெருவாரிப்பள்ளம்-55, நவமலை -58, பொள்ளாச்சி-24 என்ற அளவில் மழை பெய்துள்ளது.